செய்திகள் :

ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!

post image

தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.

தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன் சென்ற பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளார்.

அப்போது, அவர் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது உடலில் காதுகள், மூக்கு, கால்கள், கைகள் என பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அவரின் நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இயந்திரங்களை அலட்சியமாக இயக்குதல், அலட்சியமான நடத்தையால் மரணம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கபஷேரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | பாம்பன் புதிய பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்!

ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமாா் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) புதன்கிழமை ஒப்புதல் வழங்க... மேலும் பார்க்க

இன்று மகாவீா் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். சமண மதத்தினரின் முக்கிய விழாவான மகாவீா் ஜெயந்தி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னி... மேலும் பார்க்க

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

அகமதாபாத்: கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வுபெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா். குஜராத் மாநிலத்தில் சபா்மதி நதிக்கரை... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மோடி அடிபணிந்தாா் - ராகுல் காந்தி

அகமதாபாத்: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டை நெருங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பிரதமா் மோடி அடிபணிந்துவிட்டதாகவும் ... மேலும் பார்க்க

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்... மேலும் பார்க்க

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?

சிங்கப்பூரில், பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி பலியான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பார்க்க