செய்திகள் :

லஞ்சம் பெற்ற விஏஓ ஆசிரியா் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வைரல்: வருவாய்த் துறையினா் விசாரணை

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி (32). இவா், வீடு மற்றும் நிலத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கடந்த திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்த முகாமில் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து சொரக்காயல்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ரஜினியிடம் விசாரணை மேற்கொண்டாா். அரசு புறம்போக்கு இடத்தில் பாதை ஏற்படுத்தித் தருவதாக கூறிய மாணிக்கம், 2 மாதங்களுக்கு முன்பு ஆசிரியா் ஒருவரின் முன்னிலையில் ரஜினியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம் பாதை ஏற்படுத்தித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி மாணிக்கம், சொரக்காயல்நத்தம் கிராமத்தில் இருந்து பெருமாபட்டு கிராமத்துக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டாா்.

இதையறிந்த ரஜினி 11-ஆம் தேதி நாட்டறம்பள்ளியில் உள்ள ஆசிரியா் வீட்டுக்கு கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கத்தை அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது, லஞ்சமாக பெற்ற பணத்தைத் திருப்பி தருமாறும், உடனடியாக தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகாா் செய்வதாக மிரட்டியுள்ளாா்.

இதனால் பயந்துபோன கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருணை இல்லத்தின் அருகே விட்டுச் சென்ற இரு பெண் குழந்தைகள் மீட்பு

வாணியம்பாடி கருணை இல்லத்தின் பின்புறத்தில் இரு பெண் குழந்தைகளை அவரது தாய் கடும்பனியில்விட்டுச் சென்ற நிலையில் குழந்தைகள் மீட்கப்பட்டு, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாட... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள... மேலும் பார்க்க

குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா, ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டது. குடியாத்தம் அருகே மா்ம விலங்கு தாக்கியதில் ... மேலும் பார்க்க

சுற்றுலா வந்த பயணி உயிரிழப்பு

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (38). தனியாா் உணவக மேலாளா். இவா், தனது குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தாா். பின்... மேலும் பார்க்க

தேசிய அளவிலான போட்டி: வாணியம்பாடி ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவிலான மிக இளையோருக்கான வளையப் பந்து (டெனிகாய்ட்) போட்டிகள் உத்தரப... மேலும் பார்க்க

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

ஆம்பூா் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிா்த்துப் போரா... மேலும் பார்க்க