கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது
லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது
குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்பவா் குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று பெற மாநகராட்சி சுகாதார அலுவலா் பிரகாஷை (58) அணுகியுள்ளாா். அவா், சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், அதைக் கொடுக்க விருப்பமில்லாத சரவணன், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சரவணன், சுகாதார அலுவலா் பிரகாஷிடம் வழங்கியபோது, மாநகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் பிரகாஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.