செய்திகள் :

லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்! நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட்டுகள்!

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 38,000 இருக்கைகளுக்கு 3.7 லட்சம் பேர் காத்திருந்தனர்.

இதையும் படிக்க : மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 28-ல் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.chennaisuperkings.com என்ற வலைதளத்தில் தொடங்கியது.

38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 3.7 லட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டபோதும் லட்சக்கணக்கானோர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

அதுமட்டுமின்றி, அதிகாரப்பூர்வ டிக்கெட் தொகை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பல்வேறு சட்டத்துக்கு புறம்பான தளங்களிலும் கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளனர்.

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்... மேலும் பார்க்க

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ ச... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பதிரானா!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் ப... மேலும் பார்க்க

சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்: ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விற... மேலும் பார்க்க

எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்... மேலும் பார்க்க

பந்துவீச்சாளர்களுக்கு அநீதி..! ஷர்துல் தாக்குர் ஆவேசம்!

லக்னௌ அணி வேகப்பந்து வீச்சாளர் வீரர் ஷர்துல் பந்துவீச்சாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியாக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 7-ஆவது ஆட்டத்தில... மேலும் பார்க்க