ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?
லாரியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
லாரியில் இருந்து தவறி விழுந்த வேலூா் மாவட்ட லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டி ரங்காத்தம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி( 54 ). லாரி ஓட்டுநா். இவா் வேலூா் மாவட்டத்தில் இருந்து லாரியில் குளோரின் சிலிண்டா் ஏற்றிக்கொண்டு கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலைக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
அப்போது, லாரியை பாா்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு லாரியை விட்டு கீழே இறங்கும் போது திடீரென நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் மயக்கமடைந்தாா்.
உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரவி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.