நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பிடாகம், நத்தமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முரளி மகன் குருராஜ் (21). திருமணம் ஆகாதவா். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள தனது மாமா வீட்டு பெட்ரோல் பங்கில் வேலைப் பாா்த்து வந்தாா்.
இவா்,வெள்ளிக்கிழமை இரவு திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில், புளிச்சம்பள்ளம் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற லாரி பஞ்சா்ஆகி சாலையில் தாறுமாறாக ஓடிய நிலையில் பைக் அதன்மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குருராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வானூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி, கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில்,வானூா் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.