கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!
நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்துள்ள லோகா திரைப்படத்துக்கு கூடுதலாக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ’லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா சேப்டர் 1.
ஆக்ஷன் - சாகச பின்னணியில் சூப்பர்வுமன் கதையாக உருவான இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார்.
ஓணம் வெளியீடாக ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதில், மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரளத்தில் 250லிருந்து 350-க்கும் அதிகமாக திரைகள் அதிகரித்துள்ளது.