தண்டகாரண்யம்: "கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம்" -...
வக்ஃப் சட்டம்: சில விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை.
எனினும் வக்ஃப் வாரியத்தை உருவாக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதேபோல வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத 4 பேர் இருக்கலாம், முஸ்லிம் அல்லாதவர்கள் 4 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிலம் நன்கொடையை அளிக்கலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஆட்சியரின் அதிகாரம் நிறுத்திவைக்கப்படுகிறது.
தனிப்பட்ட உரிமைகள்பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது. இது அதிகாரத்தை மீறும் செயல்.
தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கும் வரை 3 ஆம் நபருக்கு உரிமை அளிக்க முடியாது" என்று கூறியுள்ளது.