செய்திகள் :

வங்கக் கடலில் மே 27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

post image

வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் வரும் 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால், இதற்கு தாய்லாந்தின் பரிந்துரையின்படி ‘மந்தா’ எனப் பெயரிடப்படும்.

கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே, காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மே 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 23-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், பாளைக்கோட்டையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை வெப்பநிலை சற்று குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின... மேலும் பார்க்க

தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

தில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் வைகை தமிழ்நாடு இல்லத்தின் கட்டுமானப் பணிகளைவெள்ளிக்கிழமை பார்வையிட்டார். தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்

ஏற்காடு கோடை விழாவை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் இன்று தொடங்கி வைத்தனர்.ஏற்காட்டில் 48-ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி 23 ஆம் தேதி முதல் 29 ஆம்... மேலும் பார்க்க

ரெட் அலர்ட்: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப் படை விரைவு!

மே 25, 26-ல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து கோவை, நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு ... மேலும் பார்க்க

மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை! அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

தமிழக மின்சாரத்துறையின் கொள்கை மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினார்.பெங்களூரில் இன்று (மே 23) மத்திய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (மே 22) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதியை தாண்டியுள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க