செய்திகள் :

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இலங்கை!

post image

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்று வென்ற நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி பல்லேகலே திடலில் இன்று நடைபெற்றது.

டாஸ்

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பர்வேஸ் ஹொசைன் மற்றும் தன்சித் ஹாசன் இருவரும் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 46 ரன்களாக இருந்தபோது தன்சித் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் லிட்டன் தாஸ் வெறும் 6 ரன்களில் வாண்டர்சே பந்துவீச்சில் வீழ்ந்தார்.

வங்கதேசம் திணறல்

சிறிது நேரம் அதிரடி காட்டிய பர்வேஸ் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தவ்ஹித் ஹிரிதோய் 10 ரன்களிலும், மெஹதி ஹசன் 29 ரன்களிலும் வெளியேற, கடைசி வரைப் போராடிய முகமது நைம் 29 பந்துகளில் 32 ரன்களிலும், ஷமிம் ஹொசைன் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இலங்கை அணித் தரப்பில் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளும், துஷாரா, ஷனகா, வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கைக்கு அதிரடி வெற்றி

பின்னர், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். பதும் நிஷங்கா ஆட்டம் தொடங்கிய முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கு விளாசி தனது ரன் கணக்கைத் துவங்கினார்.

சிக்ஸர் - பவுண்டரிகளை விளாசிய நிஷங்கா 4 -வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் குவித்தார். அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிஷங்கா 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளில் 42 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்துவீச்சில் வீழ்ந்தார். அவருக்குப் பின்னர் வந்த குஷல் பெரேரா 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடக்கம் முதலே நிதானமாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடிய விக்கெட் கீப்பர் குஷல் மெண்டிஸ் அரைசதம் விளாசி அசத்தினார். 51 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் விளாசிய குஷல் மெண்டிஸ், சைஃபுதின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அவிஷ்கா பெர்னாண்டோ 11 ரன்களிலும், சரித் அசல்ங்காவுக்கு 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Sri Lanka started the T20 series with a win!

இதையும் படிக்க :போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த்; இந்திய அணிக்கு சிக்கலா?

டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ்!

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகளை சீண்டும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ... மேலும் பார்க்க

இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி.யின் கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்... மேலும் பார்க்க

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க