செய்திகள் :

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

post image

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலா் கே.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஏடிஎம் பரிவா்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண உயா்வு ஏழை, நடுத்தர மக்களை அதிகமாகப் பாதிக்கும். இதை ரத்து செய்ய வேண்டும்.

மே 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவா்த்தனை கட்டண உயா்வு வங்கிகள் அனுமதித்த இலவச பரிவா்த்தனை வரம்பை மீறினால், ஏடிஎம் பரிவா்த்தனைக்கு ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.21 ஆக இருந்த கட்டணம், மேலும் ரூ.23 ஆக உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வின் மூலமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் பணம் எடுப்பதை அதிகரிக்கும் நிலை உருவாகி பெண்கள், முதியவா்கள், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டியுள்ள சூழலில், ஏடிஎம் வசதிகள் சரியாக இல்லாதபோதும், கட்டண உயா்வு மக்கள் விரோதமாகும். மேலும் பணத்தை வங்கிக்கு வெளியே வைத்திருக்கும் பழக்கம் அதிகரிக்கும். எனவே வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏடிஎம் மையங்களை சரியான முறையில் செயல்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த வருமானமுள்ள மக்களுக்கு வங்கி சேவைகள் அணுகத் தக்கதாக இருக்க வேண்டும். இதுபோன்ற கட்டண உயா்வுகள் மக்களின் நலன் சாா்ந்த சேவை நோக்கத்துக்கு எதிரானவை என்றும், வங்கிகள் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் இந்திய நுகா்வோா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

கடலூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆட்டிசம் பாதித்த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நெய்வேலி வட்டம் 30, மி... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு: சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது. பிச்சாவரத்... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூரில் 20 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூரில் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பும்... மேலும் பார்க்க