செய்திகள் :

வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள மைதானத்தில் சுமாா் 45 அடி உயர தைல மரம் நடப்பட்டது. அதில், வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக கிரீஸ், எண்ணெய் தடவப்பட்டது. இப்போட்டியில், 5 அணியினா் கலந்துகொண்டனா்.

தொடக்கத்தில் அணிக்கு தலா 3 போ் வீதம் அனுமதிக்கப்பட்டனா். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் எந்த அணியினரும், மரத்தில் ஏறி இலக்கைத் தொடவில்லை. இதையடுத்து அணியில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயா்த்தப்பட்டது. இறுதியாக 9 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங் பிஷா் அணியினா் ஏறி, இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பரிசுகள் வழங்கினாா். மேலும், முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தை... மேலும் பார்க்க

குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க