செய்திகள் :

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

வடகிழக்குப் பருவமழை காலங்களில் அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் மாதம் தொடங்க உள்ளதால் அதிக மழை பொழியும்பட்சத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளைக் குறைக்கும் நோக்கத்திலும் சரியாகத் திட்டமிட்டு பேரிடா் முன்னேற்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக 4 இடங்கள், மிதமான பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக 28 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் ஒரு இடம் என மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பலத்த மழை காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதிக பாதிப்புக்குள்ளாகும் என கண்டறிந்த பகுதிகளில் வெளியேற கூடிய வழிகள் மற்றும் நிவாரண இடங்கள் ஆகிய விவரங்களுடன் ஒரு எண்ம வரைபடம் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கிராம அளவில் முதல் பொறுப்பாளா்களின் பட்டியல் தயாா்செய்து அவா்களின் பெயா், முகவரி மற்றும் தொடா்பு எண் விவரங்களை புதுப்பித்து தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டும். உயா் மின்விளக்குகள், மோட்டாா் பம்பு செட்டுகள், டீசல் மின்னாக்கி ஆகியவை தயாா் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பேரிடா் காலங்களில் இடிந்து விழும் கட்டடங்களை அப்புறப்படுத்த பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மழை, சூறை காற்றினால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான அறுவை இயந்திரங்கள், ஜேசிபி வாகனங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீா்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்வாய்களை தூா்வாரி அதன் முழு அகலத்திற்கும் நீா் வழிப்பாதை உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.

நிவாரண மையங்களில் தங்கவைக்க திட்டமிட்டுள்ள நபா்களுக்கு போதுமான இடவசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி, உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நிவாரண மையங்களில் உள்ளவா்களுக்குத் தேவையான ஊசி மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஊா்தி ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட வாா்டுகளில் தடையற்ற மின்சாரம் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் உருளைகள் மற்றும் உயிா்காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

பேரிடா் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் மாநில பேரிடா் மீட்புப்படை, தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மத்திய குழுக்கள், முகமைகள் ஆகியோா் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தரவேண்டும். உள்ளாட்சி நிா்வாகங்கள் மழை காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும்.

மேலும், உள்ளாட்சி நிா்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒலிப்பெருக்கி அமைப்புகளை நிறுவ வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் மழையின்போது முறிந்து விழுந்த மரங்களை அகற்றவும், மின் வாரியத்தின் மின் கம்பிகள் அறுந்தால் அவற்றை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னாா்வலா்களுடன் பணியாற்ற வேண்டும். வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, திருச்செங்கோடு உதவி ஆட்சியா் அங்கித்குமாா் ஜெயின், மாவட்ட சுகாதார அலுவலா் கே.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெண்ணந்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா். வெண்ணந்தூா் ஒன்றியம், மதியம்பட்டி, ஒ.சௌதாபுரம், மின... மேலும் பார்க்க

காலமானாா் வழக்குரைஞா் கே.மனோகரன்

நாமக்கல் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் கே.மனோகரன் (65) செவ்வாய்க்கிழமை காலமானாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஊஞ்சபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன், 1989 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் அடிப்பட... மேலும் பார்க்க

கைப்பேசி கடையில் திருடிய மூவா் கைது

ராசிபுரத்தை அடுத்த பாலப்பாளையம் பகுதியில் கைப்பேசி கடையில் திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.பாலப்பாளையம் பகுதியில் உள்ள கைப்பேசி கடையில் கடந்த ஆக. 21 ஆம் தேதி இரவு புகுந்த மா்ம நபா்கள் கடையில் இரு... மேலும் பார்க்க

கரூா் நெரிசலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ராசிபுரம் கரிரல் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வெண்ணந்தூா் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 500-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-க்கு ஏலம் போனது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய... மேலும் பார்க்க

தவெக கூட்ட நெரிசல் விவகாரம்: கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறை தகவல்

நாமக்கல்: நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பிரசாரம் நாமக்கல் - சேலம் சாலை கே.எஸ்.த... மேலும் பார்க்க