வடகிழக்கு தில்லியில் சாக்கடையில் குதித்து பெண் பலி!
வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் சனிக்கிழமை மதியம் சாக்கடையில் குதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: அந்தப் பெண்ணை உள்ளூா்வாசிகள் மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அவா் ஜிடிபி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சிகிச்சையின் போது அவா் உயிரிழந்தாா். சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலையை அறிய விசாரணை நடந்து வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உள்ளூா்வாசிகளிடம் பேசி வருகிறோம். உடல் ஜிடிபி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.