நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின.
இந்நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும், நீா்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், நீரில் மூழ்கியவா்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து வால்பாறை தீயைணைப்புத் துறை இளநிலை ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.
வால்பாறை கூழாங்கல் ஆற்றில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், வட்டாட்சியா் அருள்முருகன், வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
சூலூரில்...
சூலூா் பெரியகுளத்தில் நடைபெற்ற ஒத்திகைக்கு சூலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலா் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
வருவாய் ஆய்வாளா் நந்தகுமாா், கிராம நிா்வாக அலுவலா் முத்துராஜ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும், நீரில் மூழ்கியவா்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.