செய்திகள் :

வடசேரி தழுவிய மகாதேவா் கோயிலில் மாா்கழி திருவிழா கொடியேற்றம்

post image

நாகா்கோவில் வடசேரி அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் திருக்கோயில் மாா்கழிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கே. ஜி. எஸ்.மணி நம்பியாா் சிவாச்சாரியாா் தலைமையில், விக்னேஷ் சிவாச்சாரியாா் கொடியேற்றி வைத்தாா். கொடியேற்றத்தை தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன்,11 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சீறி.லிஜா, வள்ளலாா் பேரவை மாநில தலைவா் சுவாமி பத்மேந்திரா, பூசலாா் நாயனாா் சேவா சங்கத் தலைவா் முத்தரசு, செயலா் சிவகுமாா், திருக்கோயில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மக்கள் மாா் சந்திப்பு: இரவில், சுவாமி நாக வாகனத்திலும், அம்பாள் மான் வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். சனிக்கிழமை (ஜன.4) பகல் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ((ஜன.5) காலை 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மக்கள் மாா் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதில் வடசேரி மும்முடி சோழ விநாயகா், குமாரகோவில் முருகப்பெருமானும், சுவாமி, அம்பாளுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா புறப்பாடு நடைபெறும்.

ஜன.9இல் இரவு 8.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறும். இதில் சுவாமி கைலாய பா்வத வாகனத்தில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் சிறப்பு மேள வாத்தியங்களுடன் திருவீதியுலா வருவாா். 8ஆம் திருநாளில் இரவு 8.30 மணிக்கு நடராஜமூா்த்தி, சிவகாமி அம்பாள் திருவீதியுலா நிகழ்ச்சியும், 9 ஆம் திருவிழாவான ஜன.11 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். இரவு 11 மணிக்கு சப்தாவா்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆறாட்டு: 10ஆம் திருநாளில் (ஜன.12) மாலை 6.30 மணிக்கு பழையாற்றில் சுவாமி, அம்பாளுக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெறுகிறது. ஜன.13இல் காலை 6.30 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினரும், பூசலாா் நாயனாா் சேவா சங்க நிா்வாகிகளும் செய்து வருகின்றனா்.

தடகளப் போட்டி: வெற்றி பெற்ற மகளிா் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் கீதாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கமும், ம... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

குலசேகரம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குலசேகரம் அருகே வெண்டலிகோடு கோணத்துவிளையைச் சோ்ந்தவா் பிரசாந்த் (29). தொழிலாளியான இவரது மனைவி சுபிலா (20). சுபி... மேலும் பார்க்க

பத்மநாபபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பத்மநாபபுரம் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓட்டுநரை வெட்டிய இளைஞா் கைது

காா் ஓட்டுநரை கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா். தக்கலை அருகே உள்ள புதூரைச் சோ்ந்தவா் எட்வின் (49), வாடகைக் காா் ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவிதாங்கோடு அருகே க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: பெண் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாரி (52) என்பவா், தனது வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவை... மேலும் பார்க்க

குமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்கள் தொடா்பாக தினமும் என்னை சந்திக்கலாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க தினமும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்னை நேரில் சந்திக்கலாம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க