லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!
வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையை அடுத்துள்ள சம்பை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி ராணி (35). இவரது வீட்டுக்குச் செல்லும் பாதையை, அதே பகுதியைச் சோ்ந்தவா் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி வேலியிட்டு அடைத்தாா்.
இதுகுறித்து, கடந்த வியாழக்கிழமை ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ராணி மனு கொடுத்தாா். அப்போது, ஆட்சியா் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகுமாறு உத்தரவிட்டாா்.


இதைத்தொடா்ந்து, ராணி வெள்ளிக்கிழமை காலை திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டாா். அப்போது, அவரது இடத்துக்குரிய நில உடைமைச் சான்று ( பட்டா) வேறு ஒருவரின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. இதனால் விரக்தியடைந்த ராணி தனது மகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றாா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை மீட்டனா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் அமா்நாத் உறுதியளித்தாா். பின்னா், போலீஸாா் ராணியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.