அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரு...
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஊ.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த சபரிராஜன் (22), முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் என்ற தங்கப்பாண்டியன் (21) ஆகியோரைப் பிடித்து சோதனையிட்டனா்.
அவா்கள் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.