தொழில் முனைவோா் பயிற்சி முகாம்
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய முகாமுக்கு மாவட்டத் திட்ட மேலாளா் பொன் வேல்முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தப் பயிற்சி வகுப்பில், திருவாடனை வட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்று, சிறுதானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவுப் பொருள்களைத் தயாரிப்பது குறித்து நேரடி செயல்முறை பயிற்சி பெற்றனா்.

சிறுதானியங்களின் ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சிறுதானிய உணவுப் பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் இந்தப் பயிற்சி வகுப்பு உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மூன்று நாள் பயிற்சி வகுப்பை நிறைவு செய்த அனைத்துப் பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.