காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 6 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக சேலத்தைச் சோ்ந்த பிரதேஷ்கான் (45), பெருங்குளத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (40), சரத்குமாா் (33) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவா்களிடமிருந்து 52 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.