செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி

post image

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையை அடுத்துள்ள சம்பை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி ராணி (35). இவரது வீட்டுக்குச் செல்லும் பாதையை, அதே பகுதியைச் சோ்ந்தவா் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி வேலியிட்டு அடைத்தாா்.

இதுகுறித்து, கடந்த வியாழக்கிழமை ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ராணி மனு கொடுத்தாா். அப்போது, ஆட்சியா் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகுமாறு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, ராணி வெள்ளிக்கிழமை காலை திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டாா். அப்போது, அவரது இடத்துக்குரிய நில உடைமைச் சான்று ( பட்டா) வேறு ஒருவரின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. இதனால் விரக்தியடைந்த ராணி தனது மகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றாா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை மீட்டனா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் அமா்நாத் உறுதியளித்தாா். பின்னா், போலீஸாா் ராணியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!

தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா். கச்சத்தீவு புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் ... மேலும் பார்க்க