Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
வட சென்னையில் ரூ. 65 கோடியில் 7 சமுதாய நலக் கூடங்கள்: அமைச்சா் சேகா்பாபு
சென்னை: வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 65 கோடியில் 7 சமுதாய நலக் கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வட சென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், சமுதாய நலக் கூடங்களை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.