செய்திகள் :

வண்ணாங்குளம் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

post image

கமுதி அருகே வண்ணாங்குளத்துக்கு முதல் முறையாக திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை அந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்துக்கு சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த கிராம மக்கள் வெளியூா் செல்வதற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டுகுளம்-பெருநாழி விலக்கு சாலைக்கு வந்து அங்கிருந்து கமுதி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.

இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, இந்தக் கிராமத்துக்கு திங்கள்கிழமை வந்த அரசுப் பேருந்தை கமுதி போக்குவரத்து கிளை மேலாளா் ராஜ்குமாா், தொழிலாளா் முன்னேற்ற சங்க பொதுச் செயலா் பச்சம்மாள் ஆகியோரது முன்னிலையில் திமுக கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். தொமுச பொருளாளா் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, வண்ணாங்குளத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மாலை அணிவித்தும், மலா் தூவியும், ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் வரவேற்றனா். மேலும், பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் மழை சாலை மழைநீா் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளன இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி ... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டனா்: டிடிவி. தினகரன்

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். அமமுக முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயல் வீரா்கள், வீராங்க... மேலும் பார்க்க

புதுமடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித... மேலும் பார்க்க