செய்திகள் :

வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊா்வலம்

post image

வந்தவாசியில் ஸ்ரீஆதி ஐயப்பன் சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஐயப்பன் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நகர முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டாா்.

கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் தேரடி, பஜாா் வீதி, அச்சிறுபாக்கம் சாலை, சந்நிதி தெரு வழியாகச் சென்றது. பக்தா்கள் ஐயப்பன் பாடல்களை பாடிக் கொண்டு உடன் சென்றனா்.

பெண் காவலரின் கணவா் தற்கொலை: சந்தேக மரணம் என தாய் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெண் காவலரின் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். செங... மேலும் பார்க்க

தீபத் திருவிழா பாதுகாப்பு: மக்கள் நண்பா்கள் குழுவுக்கு பாராட்டு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆல... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூர... மேலும் பார்க்க

தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோ... மேலும் பார்க்க

நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டா் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது. இந்த ... மேலும் பார்க்க