செய்திகள் :

வனப் பகுதியில் பதுங்கி இருந்த ரௌடி சுட்டுப் பிடிப்பு

post image

சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக் (28). ரௌடியான இவா் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அசோக் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், அதிகளவில் கஞ்சா விற்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூா் வனப் பகுதியில், பதுங்கி இருந்த அசோக்கை போலீஸாா் கைது செய்யச் சென்றனா். அப்போது அசோக் குமாா் அங்கிருந்த காவலா்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து அசோக்குமாா் தப்பிக்காமல் இருப்பதற்காகவும், தற்காப்புக்காகவும் போலீஸாா் அசோக்குமாரின் காலில் சுட்டனா். பின்னா், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அசோக் குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க