செய்திகள் :

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

post image

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார்.

பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கணேஷ் ராம் சிங் குந்தியா எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

கடந்த 2020-21 முதல் 2024-25 வரை ஒடிசாவில் 2,832 யானைகள், புலிகள் மற்றும் பிற வன விலங்குகள் இறந்துள்ளதாகவும் அவற்றில் 806 வனவிலங்குகள் வேட்டையாடியதன் காரணமாக கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் வனவிலங்குகளைக் கொன்ற குற்றச்சாட்டுகளில் மொத்தம் 4,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் காலகட்டத்தில் யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் தாக்குதல்களில் 799 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,962 பேர் காயமடைந்துள்ளனர்.

அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், தேன்கனல் வனப்பிரிவில் 318 காட்டு விலங்குகள் உயிரிழந்துள்ளன, இது மாநிலத்தில் இந்தப்பகுதியில் பதிவான அதிக உயிரிழப்பாகும்.

அதகர் வனப் பிரிவில் 197 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அங்குல் (151), கியோஞ்சர் (129), பாலசோர் (117) நயாகர் (113), சிலிகா (103) மற்றும் கியோஞ்சர் (102) ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாகக் கூறினார்.

வேட்டையாடியதன் காரணமாகக் கொல்லப்பட்ட 809 வனவிலங்குகளில் தேன்கனல் வனப்பிரிவில் 75, அதைத்தொடர்ந்து நயாகரில் 63, அத்தமல்லிக் மற்றும் சிமிலிபால் தெற்கு வனவிலங்குப் பிரிவுகளில் தலா 55 என பதிவாகியுள்ளன. மேலும் அத்தகர் (50), பவுத் (31), ரெதகோல் (29), கியோஞ்சர் (29), கட்டாக் (27), ராஜ்நகர் (27), மற்றும் சட்கோசியா (26) ஆகியவை அடங்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் தேன்கனல் வனப்பகுதியில் 147 பேர் காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டதாகவும், அங்குல் பிரிவில் 76 பேர் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கியோஞ்சர் வனப்பிரிவில் 69 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து பாரிபாடாவில் 54 மற்றும் ரூர்கலா வனப் பிரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் காட்டு விலங்கு தாக்குதலால் இறந்தவரின் குடும்பத்துக்கு வனத்துறை ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?

ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப... மேலும் பார்க்க

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து... மேலும் பார்க்க

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, பட்ஜெட்டில் காட்டப்பட... மேலும் பார்க்க

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத... மேலும் பார்க்க