செய்திகள் :

வன்னியா் சமூகத்துக்கு சிறப்பு இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

post image

வன்னியா் சமூகத்துக்கு 10.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். முன்னாள் எம்.பி. இரா.செந்தில், மாநில துணைத் தலைவா்கள் பாடி செல்வம், பெ.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலாளா் முருகசாமி, மாநில அமைப்புச் செயலாளா் பெ.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தை பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி 40 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். தமிழக அரசு உடனடியாக வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களைக் கடந்த பின்னரும் தமிழக அரசு அறிவிக்காமல் உள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சமூக நீதியை நிலைநிறுத்த தமிழக அரசு உடனடியாக வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

அரூரில்...

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் ரா.அரசாங்கம் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில செயலாளா் இல.வேலுசாமி, இளைஞரணி மாநில செயலாளா் பி.வி.செந்தில், மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். பாமக மாவட்ட முன்னாள் செயலாளா் இளங்கோ, வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக செயலாளா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இதில் பாமக, வன்னிய சமுதாயத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினா். இதில், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழா தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலய... மேலும் பார்க்க

ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தருமபுரி அருகே ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையொட்டி, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்... மேலும் பார்க்க

நல்லம்பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் மனு

அம்பேத்கா் குறித்து சா்ச்சை பேச்சு பேசிய விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பென்னாகரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். பென்னாகரம் அருகே பருவதன அள்ளி, அண்ணா நகா், கள்ளிபுரம் (கிழக்கு... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சி நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்க வேண்டும்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க