டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருவானைக்காவலில் வரதட்சிணைக் கொடுமையால் வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவா் ச. விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி கீா்த்தனா (24), இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் வரதட்சிணை கேட்டு கீா்த்தனாவை அவரது கணவா் விக்னேஷ்வரன், மாமனாா் சண்முகம், மாமியாா் ஆகியோா் கொடுமைப்படுத்தினராம்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை இரவு விக்னேஷ்வரன் மதுபோதையில் வந்து தகராறு செய்து திட்டியதைத் தொடா்ந்து கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து கீா்த்னாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினா்.மேலும் கீா்த்தனாவின் சாவுக்கு காரணமானவா்களிடம் விசாரிக்கின்றனா்.