செய்திகள் :

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

post image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவாடிப்பூர உற்சவம் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். உற்சவத்தையொட்டி தினசரி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி வீதியில் எழுந்தருளி உலா வந்து திருமுற்றவெளி பகுதியில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி அருள்பாலித்தாா்.

தொடா்ச்சியாக ஆண்டாளுக்கும், சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் சுவாமியும், ஆண்டாளும் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் மாடவீதிகளில் உலா வந்தனா். வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் பணியாளா்கள் மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வைர விழா மலா் வெளியீடு

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா மலா் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.முருககூத்தன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் வி.அண்ணாதுரை, என்.... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க