செய்திகள் :

வரம் தரும் வாரம்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 14 - 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடனிருப்போருடன் பெருந்தன்மையாக இருப்பீர்கள். சமுதாயத்தில் புகழ் உயரும். வங்கிக் கடன் பெற்று சொத்துகளை வாங்குவீர்கள். கடுமையாக உழைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் சில பிரச்னைகளைசந்திக்க நேரிடும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 20.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கடன்களை வசூலிப்பீர்கள். இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினரிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புதிய நண்பர்களிடம் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தேவையற்ற விஷயங்களில் ஒதுங்கிவிடவும். கலைத் துறையினருக்குச் செலவினங்கள் கூடும்.

பெண்களின் இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். மாணவர்கள் வெளியூர் சென்று படிப்பைத் தொடர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழிலை மேம்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு வாய்ப்புகள் உருவாகும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைத் துறையினர் பிறருடனான கருத்துவேறுபாடுகளைக் களைவீர்கள். பெண்களுக்கு கவலைகள் வந்து நீங்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் தாமதத்துடன் முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் உற்சாகத்துடன் இருப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். மாணவர்கள் பொறுமையாகச் செயல்படவும்.

சந்திராஷ்டமம் -இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

வருமானம் உயரத் தொடங்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் நன்மை உண்டாகும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் இழுபறியான செயல்களைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பணவரவு உண்டாகும்.

அரசியல்வாதிகளின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். கலைத் துறையினர் பிறரிடம் நல்லிணக்கத்தைக் காண்பீர்கள். பெண்கள் உடன்பிறந்தோருடன் அன்பாக நடப்பீர்கள். மாணவர்களின் குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தனித்தன்மையைக் கூட்டிக் கொள்வீர்கள். கையிருப்புப் பொருள்களின் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். மன நெருடல்கள் மறையும்.

உத்தியோகஸ்தர்கள் உடனிருப்போரின் உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு ஆதரவான சூழல் உருவாகும். பெண்கள் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். மாணவர்கள் நிதானமாகச் செயல்படவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தினர் அனுசரித்து நடப்பீர்கள். யோகா கற்பீர்கள். பேச்சுத் திறமையால் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய விஷயங்களை புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புகழ் பெறுவீர்கள். வியாபாரிகள் சாதகமான சூழலைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். கலைத் துறையினருக்கு மனக் குழப்பங்கள் நீங்கும். பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தாமதமான விஷயங்கள் விரைவு பெறும். புதிய அனுபவம் கிடைக்கும். இழந்த உரிமைகளை திரும்பப் பெறுவீர்கள். அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோக மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். பெற்றோரின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் நம்பிக்கையான ஊழியர்களை மதித்து வேலை வாங்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றிநடை போடுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் சேமிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் விளையாட்டு

களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை,

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கடினமான வேலைகளை முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் இருக்காது. பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு பெருகும். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு நிலப் பிரச்னைகளில் முடிவு

சாதகமாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 14

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கனவுகள் பலிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளை அரவணைத்துச் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பொருளாதார இன்னல்கள் குறையும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு அநாவசிய செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு உடன்பிறந்தோர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சில காரியங்கள் அலைச்சலுக்குப் பின்னரே நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 15, 16,17.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இல்லத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். உற்சாகமாக உங்கள் கடமைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் இன்னல்கள் குறையும். விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள். கலைத் துறையினர் கடுமையாக உழைத்துப் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்களுக்கு நெடுநாளைய எண்ணங்கள் நிறைவேறும். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 18, 19.

சிவலிங்கத்தை கையில் தாங்கிய சித்தர்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை } வாலாஜாபாத் வரும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அய்யம்பேட்டையில் மோகாம்பரி அம்மன் கோயில் எதிரில் சாலை அருகே உள்ள அஸ்தலிங்கேசுவரர் என்ற சித்தர் கோயில் அமைந்துள... மேலும் பார்க்க

வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும். "... மேலும் பார்க்க

கபாலி கற்பகாம்பாள் திருக்கல்யாணம்

"மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற பெருமையுடையது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் பார்வதிதேவி மயிலாக வடிவெடுத்து, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூஜித்து கபாலீஸ்வரர் அருள் ... மேலும் பார்க்க

கவலைகள் நீக்கும் கருணாமூர்த்தி

வட மொழியில் "திந்திரிணி' என்பது புளியமரத்தைக் குறிக்கும். "திந்திரிணிவனம்' மருவியே "திண்டிவனம்' ஆனது. "திண்டி' என்றால் "அடர்ந்த' எனப் பொருள். காஞ்சிபுரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது, நான்கு திசைகளுக்க... மேலும் பார்க்க

தோஷங்கள் நீங்கி நலம்பெற...

சோழ நாட்டு நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குவது "புள்ளிருக்கு வேளூர்' எனும் வைத்தீஸ்வரன் கோயிலாகும். இது பரிகாரத் தலமாக விளங்க, அதற்கு இணையாக காவிரியின் தென்கரையின் தேவார... மேலும் பார்க்க

தேர்வு பயம் தீர...

திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்... மேலும் பார்க்க