செய்திகள் :

`வரி ஏய்ப்பு செய்ததாக லஞ்சம்' - ஜி.எஸ்.டி துணை ஆணையர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

post image

மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி, மதுரை மத்திய ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர்கள் அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்டோர், கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். அப்போது வரி ஏய்ப்பு செய்து, ரூ.2 கோடி மதிப்பில் வீடு கட்டியிருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதால் அபராதமாக ரூ. 1.50 கோடி செலுத்த வேண்டும் என்றதுடன் அலுவகத்தில் விளக்கம் அளிக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

துணை ஆணையர் சரவணக்குமார் வீட்டில் காத்திருந்த அதிகாரிகள்

அதன்படி, இது குறித்து மதுரையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு சென்று தனது விளக்கத்தை கார்த்திக் அளித்துள்ளார். அப்போது, அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்ட அலுவலர்கள், ஜி.எஸ்.டி துணை ஆணையர் சரவணக்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, துணை ஆணையர் சரவணக்குமார், அனைத்து ஜி.எஸ்.டி-யும் குறைத்து கணக்கு காண்பிக்கவும், புகார் பிரச்னையை முடிக்கவும், ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக், மதுரை சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி கலைமணியிடம் கடந்த 2ம் தேதி புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி கார்த்திக் நேற்று ரூ. 3.50 லட்சத்தை துணை ஆணையர் சரவணக்குமார், கண்காணிப்பாளர் அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்டோரிடம் கொடுக்க... அப்போது மூன்று பேரையும் சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சோதனைக்கு வந்த சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்

இந்நிலையில், சி.பி.ஐ., டி.எஸ்.பி., தண்டாயுதபாணி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில் துணை ஆணையர் சரவணக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சி.பி.ஐ., அதிகாரிகள் பல மணி நேரம் வாசலில் காத்திருந்தனர். அதன் பின்னர், சரவணக்குமாரின் சகோதரர் கண்ணன் வந்து வீட்டு சாவியை கொடுத்த பிறகு சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க

Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சுரேஷ் சந்தி... மேலும் பார்க்க

Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்திய மாணவி

ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமி... மேலும் பார்க்க

விருதுநகரில் போலி சுங்கத்துறை அதிகாரி கைது- மோசடிக்கு வலையா? போலீஸ் விசாரணை

விருதுநகர் தனியார் லாட்ஜில் சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி ரூம் எடுத்து தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் புல்லலக்க... மேலும் பார்க்க