2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலை...
வரி செலுத்துவோரின் பணத்தைத் தவறாக பயன்படுத்தும் ஆம் ஆத்மி!
வரி செலுத்துவோரின் பணத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தவறாகப் பயன்படுத்துவதாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டினார்.
தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது..
2014-15ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மத்திய அரசு வழங்கும் பணத்தில் தில்லி அரசின் சார்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தில்லி மக்களை தங்கள் தவறான நிர்வாகத்தின் மூலமும், வரி செலுத்துவோர் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் பேரழிவு நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
ஆம் ஆத்மி எங்கு ஆட்சியிலிருந்தாலும் பேரழிவு சூழ்நிலையை உருவாக்குகிறது. பஞ்சாபில் நிலையை ஆராய்ந்து பார்த்தால் நிலைமை உங்களுக்கே புரியும். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் குழு இன்று போராட்டம் நடத்தியது.
தில்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பான நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிம்மதியாக வாழ்க்கையை நடத்திவரும் பல குடியிருப்பாளர்கள் தற்போது தங்களுக்கு வரும் அதிகப்படியான குடிநீர் கட்டணத்தால் கலக்கமடைந்துள்ளனர். மக்கள் தேர்தலுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தில்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 2025இல் நடைபெற உள்ளது. ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், கடந்த இரண்டு பேரவைத் தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் மோசமாகத் தோற்றது. 2020 பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது மற்றும் பாஜக எட்டு இடங்களைப் பெற்றது. குறிப்பிடத்தக்கது.