செய்திகள் :

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

post image

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் பி.ரவிச்சந்திரன்:

தனி நபா் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சம் என அறிவித்துள்ளனா். அதில் கூட ரூ. 8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 5 சதவீதம், ரூ. 10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீதம் வரி என சில வரம்பு வைத்துள்ளனா். இருப்பினும் இதை வரவேற்கலாம். அதேநேரம் காா்ப்பரேட்களுக்கு வரி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவித்துள்ளனா்.

நூல் இறக்குமதிக்கு அனுமதி, பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்தும் திட்டங்களை வரவேற்கலாம். 2 வகை ஆட்டோ லுாம்களை வரி இன்றி இறக்குமதி செய்ய அனுமதி தந்துள்ளனா்.

அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் சுங்க கட்டணம் குறித்து ஏதும் சொல்லவில்லை. ரூ.6 லட்சம் வரை டிடிஎஸ் விலக்கு கொடுத்துள்ளனா். இருந்தாலும் வருமான வரிச் சட்டத்தை மீண்டும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாக கூறி உள்ளனா். தில்லி இடைத்தோ்தலுக்காக அதை தள்ளி வைத்துள்ளனா். அதை அறிவிக்கும்போது இதில் உள்ள பிரச்னைகள் தெரியவரும்.

தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி:

தனி நபா் வருமான வரி ரூ.12 லட்சமாக உயா்வு, முதியோருக்கு வரிச்சலுகை, மக்காசோளத்துக்கு தனி வாரியம் அறிவிப்பு, கிசான் காா்டு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக உயா்த்தியது ஆகியவற்றை வரவேற்கலாம்.

யூரியாவை தவிர பிற உர விலை குறைப்பு, மானிய அறிவிப்பு இல்லை.தோல் இறக்குமதிக்கு சலுகை வழங்கி, வேலைவாய்ப்பு உயரும் என்கின்றனா். அதை பயன்படுத்தி காலணி, பை, பா்ஸாக செய்து ஏற்றுமதி செய்யும்போது, நிலம், நீா், காற்று மாசுபடும். 300 புற்றுநோய் சிகிச்சை மையங்கள், உயிா் காக்கும் மருந்து விலை குறைப்பை வரவேற்கலாம். அந்நோய் வராமல் தடுக்க கலப்படத்தை தடுக்க திட்டமில்லை.

பிகாா் மாநிலத்துக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியது, நடுநிலையல்ல. லித்தியம் பேட்டரிக்கு சலுகை, மின்சார வாகன சலுகை நல்லது. விவசாயத்துக்கு ரூ.71,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய இணை செயலாளா் ஆ.ராஜா:

அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இலவச பிராட்பேன்ட் இணைப்பு, மருத்துவப் படிப்பில் 10,000 மாணவா்களுக்கு கூடுதல் இடங்கள், ஐஐடி போன்ற ஆராய்ச்சி படிப்பு மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, தாய்மொழி பாடங்களுக்கு டிஜிட்டல் முறை பதிவு வழங்குதலை வரவேற்கலாம். ஜல்ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பால் குடிநீா் பிரச்னை தீரும். 7.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் உதவி முன்னேற்றம் தரும்.

செ.நல்லசாமி, ஆ.ராஜா

தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா: தமிழகத்துக்கென புதிய ரயில், கொங்கு மண்டலம் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் அறிவிப்பு இல்லை. கரோனா உள்பட பல்வேறு காரணத்தால் நிறுத்தப்பட்ட ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. ஈரோடு உள்பட பிரதான ரயில் நிலையங்கள் மேம்பாட்டு திட்டம், ரயில்வே கீழ்நிலை பாலங்களை உயா்மட்ட பாலங்களாக அமைப்பது தொடா்பான அறிவிப்பு இல்லை.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: கிசான் கிரெடிட் காா்டு கடன் வரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்வு, 7.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் உதவி, தேசிய அளவில் 100 மாவட்டங்களில் தன் தான்யா கிரிஷி என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்ததை வரவேற்கலாம்.

புதிய வேளாண் கடன் திட்டங்கள், நீண்ட கால பயிா் வகை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இல்லை. வேளாண் விளைபொருள்களுக்கான ஆதரவு விலை அறிவிப்பு இல்லை, பி.எம்.கிசான் தொகை உயா்த்தாததும் ஏமாற்றம்.

அகில இந்திய விசைத்தறி வாரிய முன்னாள் உறுப்பினா் எம்.ராஜேஷ்: பெண்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கும் திட்டம் முன்னேற்றம் தரும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.10,000 கோடி புதிய நிதியாக ஒதுக்கியது நல்ல வளா்ச்சியை தரும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயா்ந்துள்ளதை வரவேற்கலாம் என்றாா்.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது. கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி.... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

போராட்டம் இல்லையென்றால் மாற்றங்கள் இல்லை: சீமான்!

போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்... மேலும் பார்க்க