Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் கோட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் கிராம உதவியாளா்களை டி கிரேடு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். வாரிசுதாரா்களை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் வட்டத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். வட்டச் செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கொளஞ்சிமணி, பொருளாளா் இா்பானுல்லா, வட்டப் பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முழக்கமிட்டனா்.