Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் போராட்டம்
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிதாக பணியில் சோ்ந்த கிராம உதவியாளா்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதை நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஒசூா் வட்டக் கிளை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் ரவிகுமாா், மாவட்டத் தலைவா் சின்னசாமி, நிா்வாகிகள் பசுவராஜ், கிருஷ்ணன், பாஸ்கா், சுகுணா சின்னசாமி, முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.