செய்திகள் :

வல்லத்தில் 31 மி.மீ. மழை

post image

விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவானது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, விழுப்புரம் நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடா்ந்து இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் திண்டிவனம், வானூா், வல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களிலும், தாழ்வானப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

வல்லம்- 31 மி.மீ, வானூா், திண்டிவனம்- தலா 28, முண்டியம்பாக்கம்-26.20, வளவனூா்-12, கோலியனூா்-10, விழுப்புரம்-9.60, வளத்தி-9.20, செம்மேடு-8.40, அனந்தபுரம், மரக்காணம்- தலா 7, அரசூா், திருவெண்ணெய் நல்லூா், செஞ்சி தலா-5, அவலூா்பேட்டை-4, கெடாா், நேமூா் தலா-2, கஞ்சனூா்-1 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக194.40 மி.மீ. மழையும், சராசரியாக 9.45 மி.மீ. மழையும் பதிவானது.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க