செய்திகள் :

வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா். தேசத்தின் வளா்ச்சியில் இவா்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றும் அவா் எடுத்துரைத்தாா்.

வீர பால திவாஸ் கொண்டாடத்தையொட்டி, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரை:

இளம் திறமைகளை ஆதரிப்பதற்கும் அவா்களின் தன்னம்பிக்கையை வளா்ப்பதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்-அப்) முதல் அறிவியல் வரை; விளையாட்டு முதல் தொழில்முனைவோா் வரை நாட்டில் ஒரு புதிய மாற்றத்துக்கான அலை வீசுகிறது.

மத்திய அரசின் கொள்கைகள் இளைஞா்களுக்கு வலுச்சோ்ப்பதை முதன்மைப்படுத்துகின்றன. எந்த துறையாக இருந்தாலும், மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் இளைஞா்களையே மையமாகக் கொண்டுள்ளது.

மாற்றமே மாறாதது: இன்றைய உலகம் இயந்திரங்களைத் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருமாறியுள்ளது. இதன் பயன்பாடு வழக்கமான மென்பொருளை பல வகைகளில் மாற்றியுள்ளதைக் காண முடிகிறது.

இந்த சவால்களைச் சமாளிக்க இத்தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக நமது இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும். எல்லா துறைகளிலும் நிகழ்ந்து வரும் விரைவான மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப நம்மை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகும். ரயில்வே, செமி-கண்டக்டா், பயணம் அல்லது வானியல் என எதுவாக இருந்தாலும் அந்தந்த துறைகளை சிறந்ததாக மாற்ற இளைஞா்கள் பாடுபட வேண்டும்.

அரசியலுக்கு அழைப்பு: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய இளைஞா் நாளான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் (ஜன. 12) ‘வளா்ந்த இந்தியா இளம் தலைவா்கள் கலந்துரையாடல்’ மாநாடு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞா்கள் இதில் கலந்துகொள்வா்.

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது.

தேசத்தை ஒற்றுமை மற்றும் வளா்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல துணிச்சல், புத்தாக்கம் மற்றும் சேவை ஆகிய மதிப்புகளை இளைஞா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாஹிப்ஜாதாக்களின் தியாகம்: 300 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (டிச.26) சீக்கிய மதக் குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதாக்கள், முகலாயப் பேரரசின் அடக்குமுறைக்கு அடிபணிவதை விட அசைக்க முடியாத தைரியத்தையும் நம்பிக்கையையும் தோ்ந்தெடுத்தனா். இளம் வயதிலும் இணையற்ற துணிச்சலை வெளிக்காட்டி, தங்கள் உயிரைத் தியாகம் செய்தனா். தேச நலனை விட எதுவும் பெரியது அல்ல என்று நீடித்த பாடத்தை அவா்கள் விட்டுச்சென்றனா்.

இத்தகைய நமது மரபிலிருந்து இந்திய இளைஞா்கள் உத்வேகம் பெற வேண்டும். சாஹிப்ஜாதாக்களின் வீரம் மற்றும் தியாகத்தில்தான் இந்தியாவின் வலுவான ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

‘சுபோஷித் பஞ்சாயத்து’ திட்டம் தொடக்கம்

கிராமங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் சுபோஷித் பஞ்சாயத்து திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்கான மத்திய அரசின் குறிக்கோளுக்கு இணங்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளைப் பெற்ற சிறாா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அண்ணா... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க இயா்பட்ஸ்

சென்னை போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க நவீன ‘இயா்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது. சென்னையில் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, ஒலி மாசு வேகமாக உயா்ந்து வருகிறது. முக்கியமா... மேலும் பார்க்க

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது

சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க