செய்திகள் :

வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது: சீமான்

post image

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முடிவு எட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராடுவது எந்த விதத்தில் குற்றம். எதற்காக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் பேசி கண்டிக்கலாம். ஆனால், திமுகவின் போராட்டமே, போராடுபவா்களை திசைத் திருப்பத்தான்.

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் பொதுமக்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தியுள்ளனா்.

பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக்கூடாது. நாம் தமிழா் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது. கட்சியில் இருந்து நிா்வாகிகள் வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாா்.

என்எல்சி கிரேன் மோதி ஊழியா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன், பைக் மீது மோதியதில் என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா். நெய்வேலியை அடுத்துள்ள தாண்டவன்குப்பம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலை நகா் ரயில்வே மேம்பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் போலீஸா... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெருவடைச்சான் வீதியுலா

சிதம்பரத்தில் 3 லட்சம் உத்திராட்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ஆம... மேலும் பார்க்க

235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: கடலூா் ஆட்சியா் தகவல்

நிகழ் சம்பா பருவத்தில் கடலூா் மாவட்டம் முழுவதும் 235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா தெரிவித்தாா். கடலூா் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுக... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா... மேலும் பார்க்க

கொளஞ்சியப்பா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20 லட்சம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் செயல் அலுவலா் ரா.பழனியம்மாள் தலைமையில், இந்... மேலும் பார்க்க