வள்ளலாா் தினத்தில் மது விற்றால் நடவடிக்கை
வள்ளலாா் தினத்தன்று மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளலாா் தினமான பிப்ரவரி 11-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபான விடுதிகள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள், மதுபானங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.