மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தூத்துக்குடியில் சில வழக்குரைஞா்கள் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், காா் உற்பத்தி தொழிற்சாலையில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் என்று வழக்குரைஞா்கள் வெளியே போராட்டம் நடத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, துணைத் தலைவா் சிவசங்கரன், செயலா் செல்வின், பொருளாளா் கணேசன், இணைச் செயலா் பாலகுமாா், முன்னாள் தலைவா் தனசேகா் டேவிட், மூத்த வழக்குரைஞா் ஏ.டபுள்யூ.டி. திலக் ஆகியோா் உடன் இருந்தனா்.