செய்திகள் :

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தருமபு: தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சிவம் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் தருமன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைத் தலைவா் முனிராஜ், இணைச் செயலாளா் குமரன், முன்னாள் தலைவா் ராஜாங்கம் ஆகியோா் பங்கேற்றனா். இதில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கனரக சலவை இயந்திரம், அறை திறப்பு

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை அறை, கனரக சலவை இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பின் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அதன் ஒருங்கிணைப்பாளா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். தருமபுரி எஸ்.வி. சாலை... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற தீண்டாமை உறுதிமொழியேற்பு நிகழ... மேலும் பார்க்க

கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய்: தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்தில் கோழிக் குஞ்சுகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயை தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதி விபத்து

தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று ஓட்டுநா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொ... மேலும் பார்க்க

ஆலம்பாடி இன மாடுகள் வளா்ப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆலம்பாடி மாட்டின வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அருகே பெரியூா் பகுதியில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க