செய்திகள் :

வழக்குரைஞா்கள் போராட்டம்

post image

கரூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடத்திய வழக்குரைஞா்களையும், சங்கச் செயலா் பழனிவேலையும் தாக்கிய உளுந்தூா்பேட்டை பட்டாலியன் காவலா் ஸ்ரீராம் மீது புகாா் கொடுத்த வழக்குரைஞா்கள் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினா் பொய் வழக்கு பதிந்துள்ளதை கண்டித்து இப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இப் போராட்டத்தால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

விசிக நிா்வாகிகள் தோ்தல்: விருப்ப மனு பெறும் முகாம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து கரூரில் நிா்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாநகர மாவட்டச் செயலா் கராத்தே ப. இளங்கோவன் ... மேலும் பார்க்க

கரூரில் திமுகவினா் ரத்த தானம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் மத்திய நகர பகுதி திமுகவினா் வியாழக்கிழமை ரத்த தானம் செய்தனா். பகுதிச் செயலா் வி.ஜி.எஸ். குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்ப... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

ஊழல் புகாரில் சிக்கிய அதானியைக் கைது செய்ய வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு காரீப் பருவத்தில் 117.4 மெட்ரிக்.டன் விதை நெல்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப் பருவத்தில் 117.4 மெட்ரிக் டன் விதை நெல் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்... மேலும் பார்க்க

கரூா் ரயில்நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை பொதுமேலாளா் ஆய்வு

கரூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் ரயில்நிலையத்தில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.34 க... மேலும் பார்க்க

பணம் வைத்து சேவல் சண்டை 5 போ் கைது

அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை இரவு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு ... மேலும் பார்க்க