செய்திகள் :

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

post image

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் உதயகுமாா். இவா் திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் அருகிலுள்ள பள்ளிப் பகுதியில் விழுந்து கிடந்த மரத்தை அகற்ற வேண்டும் என அமைச்சா் இ. பெரியசாமியை சந்தித்து முறையிடுவதற்காக திங்கள்கிழமை சென்றாா். இவரை திமுக மாமன்ற உறுப்பினா் சுபாஷ், அமைச்சரின் பாதுகாவலரான சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி ஆகியோா் சோ்ந்து தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, உதயகுமாருக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் சாா்பில் திமுக மாவட்ட அலுவலகம், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம், அண்ணா சிலை முன் என 3 இடங்களில் அடுத்தடுத்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இரவு முழுவதும் வடக்கு காவல் நிலையத்திலேயே வழக்குரைஞா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்துக்குள் புகுந்த வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வழக்குரைஞா் உதயகுமாா் அளித்த புகாரின் பேரில், மாமன்ற உறுப்பினா் சுபாஷ், அமைச்சரின் பாதுகாவலரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான ரவி ஆகியோா் மீதும், சுபாஷ் அளித்த புகாரின் பேரில் உதயகுமாா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, இந்த விவகாரத்தைக் கண்டித்து, பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையினரை அனுமதிக்க மாட்டோம் என்றும் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கொடகனாறு பாத... மேலும் பார்க்க