செய்திகள் :

`வழிப்பறி முதல் போதைப்பொருள் வரை’ - குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பா?

post image

போதை பொருள் விற்பனையும் சிக்கிய காவலரும்!

தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருவது காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதை பொருள் விற்பனையைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலாங்கரை தனிப்படை போலீஸாரிடம் போதை பொருள் விற்கும் கும்பல் சிக்கியது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பரணிக்கும் போதை பொருள் விற்பனையில் தொடர்பு இருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நீலாங்கரை போலீஸார் காவலர் பரணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தமிழக காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் பரணி

காவலர் பரணியின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவருடன் இன்னும் சில போலீஸாருக்கு போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலில் அசோக்நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜேம்ஸிக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதனால் போலீஸார், காவலர் ஜேம்ஸை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவில் மாற்றுப்பணியில் பணியாற்றிய காவலர் ஆனந்த் அவரின் கூட்டாளியான இன்னொரு காவலர் சமீர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த காவலர் ஆனந்த் மூலம் அவரின் கூட்டாளிகளாக மற்ற காவலர்களுக்கும் போதை பொருள் சப்ளையானது தெரியவந்தது. அடுத்தடுத்து காவலர்கள் பரணி, ஜேம்ஸ், ஆனந்த், சமீர் என 4 போலீஸார் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டதையடுத்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இந்தச் சமயத்தில் சென்னை எழும்பூர் பகுதியில் காரில் போதை பொருள் கடத்திய ஒரு பெண் உள்பட இருவர் கைதாகினர். அவர்களிடம் விசாரித்தபோது டூவிலரில் வந்த ஒருவர் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் வைத்து போதை பொருளை விற்க கொடுத்த தகவலைத் தெரிவித்தனர். அதன்பேரில் யார் அந்த நபர் என விசாரித்தபோது டூவிலரின் ஹெல்மெட் அணிந்து வந்தவரின் அடையாளம் தெரியவந்தது. அவர், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொள்ளும் காவலர் அருண் பாண்டியன் எனத் தெரியவந்தது. இதையடுத்து காவலர் அருண் பாண்டியனையும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது போதைப் பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் போதை பொருளை சிறுக, சிறுக விற்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

போதைப் பொருள்

இந்தச் சூழலில்தான் சென்னை அண்ணாசாலையில் 20 லட்சம் பணத்துடன் பைக்கில் சென்ற முகமது கௌசிக் என்பவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங் கைதானதும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரின் பின்னணி குறித்து விசாரித்தபோது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ராஜாசிங் பணியாற்றுவதற்கு முன்பு ஹவாலா பணம் அதிகளவில் கைமாறும் வடசென்னையில் அவர் பணியாற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு ஹவாலா கும்பலின் பின்னணி, நெட்வொர்க் குறித்த தகவல்கள் தெரிந்திருக்கின்றன. ஹவாலா கும்பல் சிக்கும்போது அவர்களையும் பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைப்பது வழக்கம். அந்தவகையில்தான் வருமானவரித்துறையினர் தாமோதரன், பிரதீப் உள்ளிட்டோருடன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங்குக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஹவலாலா கும்பலைப் பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கும் போது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டீலிங் பேசலாமா என அவர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் சென்னை அண்ணாசாலையில் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்ற முகமது கௌசிக் கொண்டு சென்ற பணத்தை பங்கீட்டிருக்கிறார்கள். ஆனால் முகமது கௌசிக் புகாரளித்தால் இந்த வழிப்பறி அன்கோ வசமாக சிக்கிக் கொண்டது. இவர்கள் இதுபோன்று வேறு ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டார்களா என திருவல்லிக்கேணி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இன்னும் சிலருக்கு ஹவாலா வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? என கலங்குவது பொதுமக்கள் தான்!

அண்ணா பல்கலை. மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான இளைஞரின் பகீர் பின்னணி; போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். அந்த மாணவியும் அவரின் ஆண் நண்பரும் கடந்த 23-ம் தேதி இரவு பல்கலைக்கழக வ... மேலும் பார்க்க

மரம் வெட்டும் சத்தம், துரத்திச் சென்ற வனத்துறை, சந்தன மரங்களை வீசிச் சென்ற கும்பல்; பின்னணி என்ன?

நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் காடழிப்பு, வனவிலங்கு வேட்டை, மரக்கடத்தல் போன்ற வன குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இரு... மேலும் பார்க்க

`வனப்பகுதியில் நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம்’ - கான்ஸ்டபிள் பில்டர் ஆனது எப்படி?

மத்திய பிரதேசத்தில் கடந்த 19-ம் தேதி மந்தோரி வனப்பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த ஆயுதங்களுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதி வழியாக கொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைகழகம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி - கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப... மேலும் பார்க்க

விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!

விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போ... மேலும் பார்க்க