வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி வழிபடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து முருகனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுந்தரபாண்டியம் சக்திவேல் முருகன் கோவிலில் அதிகாலை பூஜைகளும் 18 வகையான அபிஷேகங்கள்,சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பக்தா்களின் பக்திப் பாடல் இசையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
சுந்தரபாண்டியம் முக்கு சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கும் வழி விடு விநாயகருக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களின் வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றன.
எஸ். ராமச்சந்திரபுரம் பழனியாண்டவா் கோவிலில் சுவாமிக்கும் ஆதி சிவனுக்கும் உற்சவருக்கும் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சஷ்டி பாராயணம் செய்து வழிபட்டனா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் முருகன் சந்நிதியில் விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/i10vb6lm/watrap_kovil_1102chn_92_2.jpg)