செய்திகள் :

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

post image

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் தனது வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ள வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

”முடிதான் பெண்களுக்கு அழகு” என்ற வாக்கியத்தை தகர்த்தெறிந்தும் வகையில் வழுக்கை தோற்றத்தில் வந்து திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நீஹர் சச்தேவ் என்ற பெண் தான் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு அலோபீசியா அரேட்டா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில அல்லது அனைத்து பகுதியிலிருந்தும் முடி உதிர்தல் ஏற்படுமாம். இதனை ஸ்பாட் வழுக்கை என்றும் அழைக்கின்றனர்.

திருமணத்தின் போது நீஹர் தனது வழுக்கையை மறைக்க விக் பயன்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் அதே தலையுடன் திருமணம் செய்துக்கொண்டதுதான் இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ செய்துள்ளது.

அலோபீசியா அரேட்டா பற்றிய சில தகவல்கள்

இந்த குறைபாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்

இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம்

இது தொற்றக்கூடியதல்ல

இதற்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

``வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன்" -கேரளா வந்த கும்பமேளா வைரல் பெண் மோனலிஸா!

கேரளாவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் போபி செம்மண்ணூர். நகைக்கடைகள் நடத்திவரும் இவர், தனது நிறுவனங்களின் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடிகைகளை அழைப்பது வழக்கம். நகைக்கடை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து ப... மேலும் பார்க்க

Valentine's Day: நீங்க உங்க காதலியை/காதலனை எவ்ளோ காதலிக்கிறீங்க; லவ் கால்குலேட்டர்ல பாத்துட்டிங்களா?

புதுப்பேட்டை படத்துல, `அம்மா-ன்னா யாருக்குதான் புடிக்காது. நாய், பூனைக்கு கூடத்தான் அம்மான்னா புடிக்கும்'-னு தனுஷ் சொல்ற மாதிரிதான் காதலும். எல்லா உயிர்களிலும் இருக்கக் கூடியது. ஆனாலும், பல வருஷம் காத... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் எனில் அவ்வளவு கஷ்டமா? நடிகர் சிரஞ்சீவி-க்கு உங்கள் பதிலென்ன? #கருத்துக்களம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். தனது நடிப்பிற்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்க... மேலும் பார்க்க

திருமண நிகழ்வில் புகுந்த சிறுத்தை; பதறி ஓடிய விருந்தினர்கள்... 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.எம்.லவ்ன் ஹாலில் நேற்று இரவு திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு விருந்தினர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இரவில் திடீரென சிறுத... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு உல்லாச சுற்றுலா சென்ற மகன்... கடத்தப்பட்டதாக கூறி விமானத்தை திருப்பிய எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தானாஜி சாவந்த். முன்னாள் அமைச்சரான தானாஜி சாவந்த் மகன் ரிஷ்ராஜ் சாவந்த் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காணாம... மேலும் பார்க்க