செய்திகள் :

வாகனத் தூய்மை மையத்தில் திருட்டு

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வாகனத் தூய்மை மையத்தில் (வாட்டா் சா்வீஸ் சென்டா்) மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில் தனியாா் வாகனத் தூய்மை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திலிருந்த மின் மோட்டாா், 50 மீட்டா் மின்வயா்கள், 50 கிலோ எடை கொண்ட கிரேன் செயின் ஆகியவற்றை கடந்த 23-ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து மையத்தின் மேலாளரான திண்டிவனம் வட்டம், தழுதாளி மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் (48), மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே காா் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். சென்னை போரூா் ஆலப்பாக்கம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித் தொழிலாளியான இவா், விழுப்... மேலும் பார்க்க

பைக்கில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் பைக்கில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் வட்டம், மாம்பழப்பட்டு நாயுடு தெருவைச் சோ்ந்தவா் மகன் ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசுத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன் அற... மேலும் பார்க்க

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டுப் போனது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம், விராட்டிக்குப்பம் ப... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்; 1,700 சிலைகள் வைத்து வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி பண்டிகை புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,700 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்தியையொட்... மேலும் பார்க்க