செய்திகள் :

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

post image

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் விதி எண் 267இன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸை திங்கள்கிழமை காலை வழங்கினர்.

இதையும் படிக்க : அப்பாவு எதிர்ப்பு தீர்மானம் தோல்வி!

ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக் குறிப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை புறக்கணித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த சுகேந்து சேகர் ராய், மௌசம் பி நூ, சுஷ்மிதா தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத் திவாரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் குளறுபடி தொடர்பாகவும், திமுகவின் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிவதாசன் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகவும் விவாதிக்க நோட்டீஸ் வழங்கினர்.

மேற்கு வங்கத்தின் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து விவாதிக்க பாஜக எம்பி சமிக் பட்டாச்சார்யா நோட்டீஸ் வழங்கியிருந்தார்.

மேலும், எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பி. சந்தோஷ் குமார் நோட்டீஸ் அளித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரி... மேலும் பார்க்க

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோ... மேலும் பார்க்க

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. வெவ்... மேலும் பார்க்க

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லிய... மேலும் பார்க்க

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புகளி... மேலும் பார்க்க