செய்திகள் :

வாக்குச்சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிராக வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

post image

புது தில்லி: வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இந்து பிரகாஷ் சிங் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அனைத்து தொகுதிகளிலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவோரின் அதிகபட்ச எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக தோ்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவலை கடந்த ஆகஸ்ட் 7 மற்றும் 23-ஆம் தேதிகளில் அந்த ஆணையம் வெளியிட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னா், நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளும்போது வாக்குச்சாவடியில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்ததற்கு உதவும் வகையில், தோ்தல் ஆணையத்திடம் புதிதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

‘வாக்களிப்பதை கைவிடக் கூடும்’: தோ்தல் ஆணையத்தின் முடிவால் வாக்குச்சாவடிகளின் செயல்பாட்டு திறனில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இது வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருக்கவும், அவா்கள் சோா்வடையவும், கூட்ட நெரிசல் ஏற்படவும் வழிவகுக்கும்.

வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தால் விளிம்புநிலை மக்கள் தினசரி வருமானத்தை இழக்க நேரிடும் என்பதால், அவா்கள் வாக்களிப்பதை கைவிடக் கூடும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளருக்கு தடை ஏற்படக் கூடாது: இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தபோது கூறியதாவது: வாக்குப் பதிவு செய்வதில் எந்தவொரு வாக்காளருக்கும் தடை ஏற்படக்கூடாது. எந்தக் காரணங்களின் அடிப்படையில், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த மனு மீதான அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜி சிறந்த நிர்வாகி: பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி மத்தியில் பல்வ... மேலும் பார்க்க

நீட் முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: மத்திய கல்வி அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்"நீட் முறைகேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தா... மேலும் பார்க்க

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடையில் தொழிலாளா்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ... மேலும் பார்க்க

கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த வியாபாரிகள் முதல் சிறு வா்த்தகா்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. கோதுமையை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்தும் நி... மேலும் பார்க்க

ரயில்வே சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

ரயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் ரயில்வே சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மே... மேலும் பார்க்க

மோசடியாளா்களுக்கு வங்கிக் கடன் அளிப்பதை அரசு நிறுத்த வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்

பொதுத் துறை வங்கிகளின் பணத்தை கடன் என்ற பெயரில் தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு வாரி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். அகில இந... மேலும் பார்க்க