பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை
ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் வரவேற்றாா்.
இதேபோல, ஆரணி தொகுதியைச் சோ்ந்த செய்யாறு ஒன்றிய அதிமுக சாா்பில் திருமணி கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ் -ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலா் அரங்கநாதன் வரவேற்றாா்.
நிகழ்ச்சிகளில் வேலூா் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைத் தலைவா் எஸ்.ஆா்.ராஜசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்- ஆப் குழு அமைத்து அதன் மூலம் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பரப்புரை செய்ய பயிற்சியளித்தனா்.
கூட்டங்களில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், போளூா் ஒன்றியச் செயலா் விமல், மாவட்டப் பொருளாளா் அரையாளம் வேலு, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா் நன்றி கூறினாா்.